கம்பியால் தொழிலாளியின் மண்டை உடைப்பு

கம்பியால் தொழிலாளியின் மண்டை உடைப்பு
X
அருமனை
அருமனை அருகே தெற்றி விளை பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (48) மர வேலை செய்யும் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ஷிஜூ.  இரண்டு பேரும் ஒன்றாக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.       இந்த நிலையில் சசிகுமார் ஒரு ஜன்னலுக்கு கம்பி வைக்க வெல்டிங் அடிப்பதற்காக ஷிஜூவிடம் கொடுத்து அனுப்பி உள்ளார். இதை அடுத்து வேலை முடிந்து ஜன்னலை வாங்க சென்றபோது, ஷிஜூ வழக்கத்துக்கு மாறாக அதிக பணம் கேட்டதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது.        இதில் ஆத்திரம் அடைந்த ஷிஜூ அங்கு கடந்த கம்பியால் சசிகுமாரின் தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சசிகுமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு  சிகிச்சைக்காக அருமனை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின்  பேரில் அருமனை போலீசார் ஷிஜுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story