கோவை: விசைத்தறியாளர்கள் போராட்டம் - த.வெ.க ஆதரவு !

X
கோவையில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள், மின்கட்டண உயர்வு மற்றும் கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. சோமனூரில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்திற்கு, த.வெ.க மாவட்டத் தலைவர் பாபு போராட்டப் பந்தலுக்கு இன்றும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மாவட்டச் செயலாளர் பாபு, தொடர்ந்து போராடி வரும் விசைத்தறி தொழிலாளர்களின் நலனுக்காக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தார். விசைத்தறி தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் வெற்றிக் கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story

