மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

மின்சாரம் தாக்கி  தொழிலாளி சாவு
X
திருச்சியில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்
திருச்சி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் சுப்பையா மகன் அருண்குமார் (26) . இவர் சனிக்கிழமை இரவு, திருவெறும்பூர் அருகே உள்ள பாலாஜி நகர் 19 ஆவது குறுக்கு தெருவில் சுரேஷ் என்பவர் வீட்டில் டைல்ஸ் பதிக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். இரவு பணி முடிந்து மின் மோட்டார் சுவிட்சை ஆன் செய்தபோது, எதிர் பாராத விதமாக அருண்குமார் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த அருண்குமாரை சக பணியாளர்கள் மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அருண்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story