தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பால்குட ஊர்வலம்

X
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள பிரசித்திபெற்ற சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில், விசுவாவசு சித்திரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குட ஊர்வலத்தில் பங்கேற்றனர். சந்திவீரன் கூடம் பகுதியில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை அடைந்தது. இதில் பெண்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். பின்னர் மூலவருக்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
Next Story

