நீலகிரி மாவட்டம் குன்னூர் அருள்மிகு தந்தி மாரியம்மன் கோவிலில் பூகுண்டம் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்த பூகுண்டம் இறங்கினர்........

X
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருள்மிகு தந்தி மாரியம்மன் கோவிலில் பூகுண்டம் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்த பூகுண்டம் இறங்கினர்........ குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா, கடந்த 4ம் தேதி முதல் தொடங்கிஒரு மாத காலமாக நடக்கும் இந்த திருவிழாவிற்கு எல்லா மதத்தினரும் கலந்து கொள்வார்கள் நேற்று வெகு விமர்சியாக பூ குண்டம் திருவிழா நடந்து இதில் காப்பு கட்டி விரதம் இருந்து பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது குன்னூர் தந்திமாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட அம்மன் ஊர்வலம், மவுண்ட்ரோடு வழியாக மாலை 6:30 மணியளவில் சுப்ரமணியர் சுவாமி கோவில் வந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்திய பிறகு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையாக பூகுண்டம் இறங்கினர். இதில், பலரும் நேர்த்திக்கடனுக்காக கைக்குழந்தைகளை சுமந்தபடி பூ குண்டம் இறங்கினார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

