நீலகிரி சைபர் கிரைம் காவல்துறையின் விழிப்புணர்வு வீடியோ...

X
நீலகிரி சைபர் கிரைம் காவல்துறையின் விழிப்புணர்வு வீடியோ... இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் இணையவலி மூலமாகவும் செயலிகள் மற்றும் லிங்குகள் மூலமாகவும் பல்வேறு குற்ற செயல்கள் நடைபெறுகிறது. அந்த வகையில் புதிதாக ஒரு முறையில் சைபர் குற்றங்கள் அரங்கேறி உள்ளது. இதற்காக நீலகிரி மாவட்ட காவல்துறையின் சார்பாக விழிப்புணர்வு வீடியோவும் வழங்கப்பட்டுள்ளது. அதில் நமது நண்பர்களின் தொலைபேசி எண்களில் இருந்து வாட்ஸப் மூலமாகவோ டெலிகிராம் மூலமாகவோ ஒரு லிங்க் வரும். நம் நண்பர் தானே என அதனை அழுத்தியவுடன் நமது கான்டக்ட் முழுவதும் ஹேக் செய்யப்படும். மேலும் நமது நண்பர்கள் அனைவருக்கும் அதே போல நாம் அனுப்பியதை போல ஒரு லிங்க் அனுப்பப்படும். அதன் மூலம் பணத்தை கையாடல் செய்வதற்கும் வாய்ப்புகள் உள்ளதால் நண்பர்கள் இடமிருந்து ஏதேனும் புகைப்படமோ அல்லது லிங்கோ வந்தால் அதனை உபயோகப்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த குற்றவாளிகளை குறித்து விசாரித்து வருவதாகவும் விரைவில் கண்டுபிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமுன் காப்பதே சிறந்தது என்பதை போல இது போன்ற குற்றம் சம்பவங்களில் நம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். நண்பர்களின் எண்களில் இருந்து புகைப்படங்கள் செயலிகள் வந்தால் அதை நாம் தெரியாமல் தொடும்பொழுது நமது இன்ஸ்டாகிராம் வாட்ஸ் அப் பேஸ்புக் டிவிட்டர் ஆகியவை சைபர் குற்றவாளிகள் இடம் சென்று விடுகிறது. அவர்கள் அதனை பயன்படுத்தி நமது நண்பர்களிடத்தில் அவசர தேவைக்காக பண உதவி வேண்டும் எனவும் பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுவதற்கான அதிகமான வாய்ப்புகள் உள்ளது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற செய்திகளையும் புகைப்படங்களையும் தொடாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையின் சார்பாக காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உங்கள் நண்பன் என பெயருக்கு மட்டும் இல்லாமல் சிறப்பான விழிப்புணர்வுகளையும் முன்னேற்பாடுகளையும் செவ்வனே செய்து வருகிறது நீலகிரி மாவட்ட காவல்துறை.
Next Story

