சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

X
சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு. நீலகிரி மாவட்டம், குன்னூர் நகர திமுக சார்பில், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, குன்னூர் நகர கழக அலுவலகத்தில் கழக உயர்நிலை செயல்திட்டகுழு உறுப்பினர் பா.மு.முபாரக் அவர்கள் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.குன்னூர் நகர செயலாளர் ராமசாமி அவர்கள் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம் ராஜா, பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, செல்வம், காளிதாசன், தலைமை கழக பேச்சாளர் முபாரக், குன்னூர் நகரமன்ற தலைவர் சுசீலா, நகர நிர்வாகிகள் தாஸ், முருகேசன், சாந்தா சந்திரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பத்மநாபன், வினோத்குமார், குன்னூர் நகரமன்ற உறுப்பினர்கள் ஜெகநாதன், மன்சூர், குமரேசன், ராஜேந்திரன், வசந்தி, செல்வி, சமீனா, காவேரி, சித்ரா மற்றும் கழக நிர்வாகிகள் பாரூக், ரஹீம், சிக்கந்தர், ஜெயராம் ராஜா, சண்முகம் மகாலிங்கம் உட்பட கழக நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
Next Story

