உதகை திமுக சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள்

X
நீலகிரி மாவட்ட உதகை திமுக சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் சமத்துவ நாள் உறுதிமொழி" ஏற்பு நிகழ்ச்சி சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்தநாளை முன்னிட்டு நீலகிரி மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக அலுவலகம், உதகை கலைஞர் அறிவாலயத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் தலைமையில், கழக தேர்தல் பணி செயலாளர் – அரசு தலைமை கொறடா மாண்புமிகு கா.ராமசந்திரன் அவர்கள் முன்னிலையில் மலர்தூவி மரியாதை செலுத்தி “சமத்துவ நாள் உறுதிமொழி” ஏற்கப்பட்டது. முன்னதாக கழக நிர்வாகிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்று அம்பேத்கர் அவர்களின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் போஜன், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, உதகை நகர செயலாளர் ஜார்ஜ், தலைமை கழக சொற்பொழிவாளர் பாண்டியராஜ், மாவட்ட துணை அமைப்பாளர்கள் மேத்யூஸ், விஜயகுமார், ஜெகதீசன், செல்வராஜ், சிவகுமார், நகர அவை தலைவர் கோபி, கழக நிர்வாகிகள் ஹென்றி, செந்தில், சந்தோஷ், புஷ்பராஜ், மகேஷ், சம்பத், விஷ்னு, ஜோகி உட்பட கழக நிர்வாகிகள் திரளாக கலந்துக்கொண்டனர்.
Next Story

