அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

X
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியம் முடினாம்பட்டு ஊராட்சியில், அண்ணல் அம்பேத்கரின் 134-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர். விஜியலட்சுமி நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், துணை தலைவர் சாந்தி ஆறுமுகம், வார்டு உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

