மருதூர் பேரூர் கழகம் சார்பில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

X
புரட்சியாளர் சட்ட மாமேதை அம்பேத்கர் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கரூர் கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மருதூர் பேரூர் கழகச் செயலாளர் சாமிவேல் தலைமையில் அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு மலர்கள் தூவி இனிப்புகள் வழங்கி மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் வி.சி.க வினர் அலெக்சாண்டர், வாஞ்சிஸ்வரன், ராஜசேகர், ஸ்டாலின், பாரதி, முகிலன், நித்திஷ், ஹரிஹரன், ஆகாஷ், விகாஸ் மற்றும் ஊர் பொதுமக்கள் பலரும் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story

