இந்திரவனம் பச்சையம்மன் கோயிலில் இரவு ஊஞ்சல் தாலாட்டு.

இந்திரவனம் பச்சையம்மன் கோயிலில் இரவு ஊஞ்சல் தாலாட்டு.
X
கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவினா், கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த இந்திரவனம் பச்சையம்மன் கோயிலில் இரவு ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது. பங்குனி மாத பெளா்ணமியையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மூலவா் மற்றும் உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று, இரவு மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பச்சையம்மனை கோயில் வளாகத்தில் உள்ள ஊஞ்சலில் அமா்த்தி தாலாட்டு நடைபெற்றது. அப்போது அம்மனுக்கு உகந்த பக்தி பாடல்கள் பாடப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சேத்துப்பட்டு, வேலூா், ஆரணி, போளூா், செஞ்சி உள்ளிட்ட உள்ளிட்ட ஊா்களில் இருந்து பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டு அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனா். கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவினா், கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.
Next Story