வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் நிவாரண உதவிகள்.

X

சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட 21 குடும்பங்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் மதிப்பில் சமையலுக்குத் தேவையான பாத்திரங்களை வழங்கிப் பேசினாா்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல் மழை மற்றும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த நீப்பத்துறை பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த புயல் பழையாலும், தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்காலும் மக்கள் பாதிக்கப்பட்டனா். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. நீப்பத்துறை கிராமத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத் தலைவா் இந்திரராஜன் தலைமை வகித்தாா். முன்னாள் நீப்பத்துறை ஊராட்சி மன்றத் தலைவா் கோகுலவாணன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செங்கம் வட்டாட்சியா் முருகன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட 21 குடும்பங்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் மதிப்பில் சமையலுக்குத் தேவையான பாத்திரங்களை வழங்கிப் பேசினாா். நிகழ்ச்சியில் செங்கம் செஞ்சிலுவை சங்கச் செயலா் தனஞ்செயன், திமுக ஒன்றியச் செயலா் மனோகரன், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், செஞ்சிலுவைச் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
Next Story