நலத்திட்ட உதவிகளை வழங்கிய திமுகவினர்
மதுரை சிந்தாமணி பர்மா காலனியில் திமுக தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் நேற்று (ஏப்.14)டாக்டர் அம்பேத்கர் 134 வது பிறந்த தின விழாவிற்கு மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தனபால், பொதுக்குழு உறுப்பினர் செந்தாமரை கண்ணன் அவைத்தலைவர் கணேசன் வட்ட செயலாளர் சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.மதுரை தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் கீர்த்திகா தங்கபாண்டியன் அம்பேத்கரின் பிறந்த தின விழாவை முன்னிட்டு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்தனர் . சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும் . சாதி சமுதாய மற்ற தாழ்வுகளை களையவும். அனைத்து சமூகத்தினருடன் சமத்துவத்தையும் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என தீண்டாமை உறுதி மொழி எடுத்தனர். அதனைத் தொடர்ந்து 400 பெண்களுக்கு அரிசி , சேலை உள்ளிட்ட பொருட்களை நலதிட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் மணிமாறன், கீர்த்திகா தங்கப்பாண்டியன் வழங்கினர். தெற்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் பிரமிளா. ரதி உள்ளிட்ட 400 பேர் கலந்து கொண்டனர்.
Next Story





