பயணியர் நிழற்குடை கட்ட பூமி பூஜை

X

பூஜை
சின்னசேலம் அடுத்த நைனார்பாளையத்தில் பயணியர் நிழற்குடை கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கி, ஒன்றிய பொது நிதியில் இருந்து 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய பயணியர் நிழற்குடைக்கு அடிக்கல் நாட்டினார்.பி.டி.ஓ., ரங்கராஜன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் கனகராஜ் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் மலர்கொடி அன்புசெழியன் வரவேற்றார். நிகழ்ச்சியில், ஒன்றிய கவுன்சிலர்கள் சித்ரா, பெரியசாமி, தெய்வானை பாலகிருஷ்ணன், தி.மு.க., இளைஞரணி வெங்கடேசன், சின்னதம்பி, நிர்வாகிகள் சுரேஷ், ராஜேந்திரன், கண்ணன், நெடுமாறன், கிளை செயலாளர்கள் பகுத்தறிவு, முத்துசாமி, அண்ணாதுரை, இளையாப்பிள்ளை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story