மானாமதுரையில் வாளை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

X

மானாமதுரையில் வாளை காட்டி மிரட்டி பணம் பறித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் நாகலிங்கம் மகன் ஆண்டிவேளார். இவர் மானாமதுரை அரசு மருத்துவமனை பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்த பூமிநாதன் மகன் வந்தியத்தேவன் வாளை காட்டி மிரட்டி ரூபாய் 100 பணத்தை பறித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து பணம் மற்றும் வாளை பறிமுதல் செய்துள்ளனர்
Next Story