வேம்பி கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை!

கலவை அடுத்த வேம்பி கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் மாம்பாக்கம் அரசு மருத்துவமனையின் கீழ் இயங்கி வருகிறது. ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் பராமரிப்பின்றி மேல் தளத்தின் சிமெண்டு பூச்சுக்கள் உதிர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு மாதாந்திர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்கள் மேற்கூரையின் சிமெண்டு பூச்சுக்கள் உதிர்ந்து காணப்படுவதை கண்டு அச்சத்தில் வந்து செல்கின்றனர். அதேப்போல் ஆரம்ப சுகாதார நிலையத்தின் பின்புறத்தில் செவிலியர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை செவிலியர்கள் பயன்படுத்துவது இல்லை. அதனால் கட்டிடம் முழுவதும் பாழடைந்து, மாடுகளுக்கு வைக்கோல் அடுக்கி வைத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிககை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள். பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

