கோவை: தன அலங்காரத்தில் காட்சி அளித்த முத்துமாரியம்மன் !

கோவை காட்டூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவிலின் மூலஸ்தானம் முழுவதும் ரூபாய் 100, 200 மற்றும் 500 நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
தமிழ் புத்தாண்டு சித்திரைக்கனி தினத்தை முன்னிட்டு நேற்று அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன்படி, கோவை காட்டூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவிலின் மூலஸ்தானம் முழுவதும் ரூபாய் 100, 200 மற்றும் 500 நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும், முத்துமாரி அம்மனுக்கு தங்க நகைகளால் சிறப்பு தன அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்த சிறப்பு அலங்காரத்தின் மொத்த மதிப்பு சுமார் நான்கு கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று தன அலங்காரத்தில் காட்சியளித்த முத்துமாரியம்மனை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பக்தர்களின் வருகை அதிகரித்ததால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. சித்திரைக்கனி திருநாளன்று முத்துமாரியம்மனுக்கு செய்யப்பட்ட இந்த பிரம்மாண்ட அலங்காரம் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
Next Story