கோவை: மருதமலை- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் !

தமிழ் முருகப்பெருமானின் ஏழாம் படை வீடாகப் போற்றப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் புத்தாண்டான நேற்று முருகப்பெருமானின் ஏழாம் படை வீடாகப் போற்றப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, மருதமலை முருகன் கோவிலில் அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரங்களும் நடைபெற்றன. முருகப்பெருமான் கிரீடம் சூட்டப்பட்டு ராஜா அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக, சட்டக் கல்லூரி அருகே உள்ள காலி இடத்தில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக, மலைக்கு மேலே இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளவும் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மருதமலை முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு வழிபாடு வெகு சிறப்பாகவும், அமைதியாகவும் நடைபெற்றது.
Next Story