கோவிந்தபாளையம் பஸ் ஸ்டாப் அருகே கார் -டூ வீலர் நேருக்கு நேர் மோதி விபத்து.

கோவிந்தபாளையம் பஸ் ஸ்டாப் அருகே கார் -டூ வீலர் நேருக்கு நேர் மோதி விபத்து.
கோவிந்தபாளையம் பஸ் ஸ்டாப் அருகே கார் -டூ வீலர் நேருக்கு நேர் மோதி விபத்து. தஞ்சை மாவட்டம், பள்ளி அக்ரஹாரம், நடுத்தெருவைச் சேர்ந்தவர் சரவணன் வயது 28. இவர் ஏப்ரல் 13-ஆம் தேதி மாலை 4:45-மணி அளவில், கோவை -கரூர் சாலையில் அவரது காரில் சென்று கொண்டிருந்தார். இவரது கார் கரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவிந்தம் பாளையம் பஸ் ஸ்டாப் அருகே சென்ற போது, எதிர் திசையில் தர்மபுரி மாவட்டம், வேப்பமருதூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் வயது 27 என்பவர்,அருகில் உள்ள நல்லம்பள்ளி, சாமி ரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த பெருமாள் வயது 35 என்பவருடன் டூவீலரில் வேகமாக வந்தவர், சரவணன் ஓட்டி வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டூவீலர் உடன் கீழே விழுந்ததில் பெருமாள் மற்றும் கணேசன் ஆகிய இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டு, இருவரையும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக சரவணன் அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய கணேசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Next Story