மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்றவர்கள் எட்டு பேர் கைது

X
ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இதில், சட்ட விரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட கொடுமுடியைச் சேர்ந்த விஜயராஜ் (43), சத்தியமங்கலத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம் இளையன்குடியைச் சேர்ந்த கணேசன் ( 36), கோபி அடுத்த வண்டிபேட்டையைச் சேர்ந்த தாராபீ ( 61), சென்னிமலை அடுத்த வேப்பிளியைச் சேர்ந்த பழனிசாமி (64), ஈரோடு சூரம்பட்டியில் மது விற்பனை செய்த சென்காசி மாவட்டம் தாளவாய்புரத்தைச் சேர்ந்த மாதன் ( 23), அம்மாபேட்டை அடுத்த பூதம்பாடி சந்தையில் மது விற்ற புதுக்கோட்டை மாவட்டம் கிரகாதிகோட்டைச் சேர்ந்த இளையராஜா (38), ஈரோடு முனிசிபல் காலனியைச் சேர்ந்த சதீஸ்குமார் (35), நம்பியூர் அடுத்த நடுப்பாளையத்தைச் சேர்ந்த சேகர் ஆகிய 8 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான 170 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story

