நாமக்கல்லில் உலக திருநங்கைகள் தினம் கேக் வெட்டி கொண்டாட்டம்!

நாமக்கல்லில் உலக திருநங்கைகள் தினம் கேக் வெட்டி கொண்டாட்டம்!
X
நாமக்கல்லில் தேசிய திருநங்கைகள் தினம் (ஏப்ரல் -15) கொண்டாடப்பட்டது. திருநங்கைகள் கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி பொதுமக்களுக்கு குடிநீர் பாட்டில்களை அளித்தனர்.
தேசிய திருநங்கைகள் தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டு நாமக்கல் பூங்கா சாலையில் (இதயம் திருநங்கைகள் முன்னேற்ற சங்கம்) திருநங்கைகள் சார்பில்,தேசிய திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு, கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் திருநங்கைகள் கொண்டாடினர்.இந்த நிகழ்ச்சிக்கு அச்சங்கத்தின் தலைவர் சிம்ரன் தலைமை வகித்தார்.செயலாளர் அருணா,பொருளாளர் ஆர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது, திருநங்கைகள் பற்றிய பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் வினியோகம் செய்யப்பட்டன.இதில் சங்க நிர்வாகக்குழு திருநங்கை உறுப்பினர்கள், தொண்டு நிறுவனத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Next Story