ராயனூர் அருகே மது போதையில் கணவனை கட்டையால் அடித்து கொன்ற மனைவி கைது.

ராயனூர் அருகே மது போதையில் கணவனை கட்டையால் அடித்து கொன்ற மனைவி கைது.
ராயனூர் அருகே மது போதையில் கணவனை கட்டையால் அடித்து கொன்ற மனைவி கைது. கரூர் மாவட்டம், ராயனூர் அருகே உள்ள தில்லைநகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். வயது 34. இவரது மனைவி சரண்யா வயது 30. கடந்த 4- வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுது. இவர்களுக்கு பிறந்த சிவபாலன் என்ற ஆண் குழந்தை உடல்நலம் குன்றி உயிரிழந்து விட்டது கடந்த ஆண்டு. இதன் பிறகு கணவன் மனைவி இருவரும் மது போதைக்கு அடிமையானார்கள். இந்நிலையில் ஏப்ரல் 13-ஆம் தேதி இரவு 9:30 மணியளவில் இருவரும் மதுபோதையில் இருந்த பொழுது ஏற்பட்ட வாய் தகராறில், சரண்யா தனது கணவன் சந்திரசேகரை கட்டையால் அடித்து காயப்படுத்தியுள்ளார். மேலும், தனது கணவனை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கே தனது கணவன் டூவீலரில் திருமண நிலையூர் டாஸ்மாக் அருகே அருகில் கீழே விழுந்து விட்டதாக தெரிவித்துள்ளார். சிகிச்சை முடிந்து தனது கணவனை அவரது தந்தை பிச்சைமுத்து வீட்டிற்கு ஏப்ரல் 14 அதிகாலை 4:30-மணிக்கு அழைத்துச் சென்றுள்ளார். தனது மகன் மயக்க நிலையில் இருந்ததை கண்ட பிச்சை முத்து, மீண்டும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்து அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக பிச்சமுத்து காவல் நிலையத்திற்கு தெரிவித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த சந்திரசேகரின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மது போதையில் கணவனை மனைவி தாக்கிய உண்மை தெரிந்த, பிறகு சரண்யாவை கைது செய்து ஏப்ரல் 28ஆம் தேதி வரை சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.
Next Story