மீன்பிடி தடைக்காலம் அத்துமீரும் கேரள மீனவர்கள்

மீன்பிடி தடைக்காலம் அத்துமீரும் கேரள மீனவர்கள்
X
மீன்பிடி தடைக் காலத்தில் தமிழக கடற் பகுதிகளில் கேரள மீனவர்கள் மீன்பிடிப்பதை தடை செய்யவும் மீனவர்கள் கோரிக்கை
தூத்துக்குடி இன்று முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் துவங்குவதை முன்னிட்டு ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் அனைத்தும் கரை திரும்பின தூத்துக்குடி, தருவை குளம், வேம்பார் உள்ளிட்ட பகுதிகளில் விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகங்களில் கரையில் நிறுத்திவைப்பு மீன்பிடிக்கடைக்கால நிவாரணத்தை உயர்த்தி வழங்கவும் தமிழக கடற் பகுதிகளில் கேரள மீனவர்கள் மீன்பிடிப்பதை தடை செய்யவும் மீனவர்கள் கோரிக்கை மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் துவங்குகிறது இதையொட்டி தமிழக முழுவதும் கடலோர மாவட்டங்களில் விசைப்பகடகுகள் மீன்பிடிக்க மீன்வளத்துறை தடை விதித்துள்ளது இதையொட்டி ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த விசைப்படகுகள் அனைத்தும் இன்று கரை திரும்பின இதைத்தொடர்ந்து தருவைக்குளம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் அனைத்தும் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன இதேபோன்று தூத்துக்குடி விசைப்படகு மீன் பிடி துறைமுகம் வேம்பார் மீன்பிடித் துறைமுகம் ஆகியவற்றிலும் விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 600 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன இதன் காரணமாக சுமார் 25,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் இந்நிலையில் விசைப்படகு மீனவர்கள் தங்களுக்கு அரசு வழங்கும் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை எட்டாயிரத்திலிருந்து பதினைந்தாயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர் மேலும் தமிழக கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக துவங்கியுள்ள நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட விசைப்படகுகள் தமிழக கடல் பகுதியில் உள்ளே நுழைந்து மீன்பிடி தொழில் ஈடுபடுவதால் தாங்கள் தடைக்காலம் முடிந்து தொழில் செய்யும்போது மீன்கள் இல்லாத நிலை ஏற்படுகிறது இதன் காரணமாக மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் கேரள மீனவர்கள் தமிழக கடற் பகுதிகளில் தொழில் செய்வதை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்
Next Story