கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்க

கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்க
X
பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கிய சித்த மருத்துவர்
நாகை மாவட்டம் திட்டச்சேரி பேருந்து நிலையத்தில், கோடைக்காலத்தில், பொதுமக்களை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கத்தில், திட்டச்சேரி வருமுன் காப்போம் விழிப்புணர்வு சேவை மையத்தின் நிர்வாகி சித்த மருத்துவர் மு.அஜ்மல்கான் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், திட்டச்சேரி திமுக நகர செயலாளர் முகமது சுல்தான் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட பிரதிநிதிகள் குணசேகரன், ஹமீது ஜெகபர் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story