நகர் மன்ற தலைவர் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

X
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு மற்றும் திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் சார்பில்கோடைகாலத்தில் பொதுமக்கள் தாகம் தணிக்க வேண்டும் என்ற நோக்கில் பழைய பேருந்து நிலையம் அம்மா உணவகம் எதிரில் நீர் மோர் பந்தல் அமைக்கப் பட்டுள்ளது.நீர் மோர் பந்தலை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பரமத்தி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன் ஆகியோர் திறந்து வைத்தனர். பொதுமக்களுக்கு குளிர்ச்சி ஊட்டும் வகையில் நீர் மோர், வெள்ளரிப் பிஞ்சு இளநீர், தர்பூசணி பழம், சோடா, மாம்பழம் ஆகியவை வழங்கப் பட்டது ஏராளமான பொதுமக்கள் இவைகளை வாங்கி அருந்தி மகிழ்ந்தபடி சென்றனர். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன் செல்விராஜவேல், சண்முகவடிவு, மகேஸ்வரி,ராஜா,திவ்யாவெங்க டேஸ்வரன், அண்ணாமலை,செல்லம்மாள்தேவராஜன்,ரவிக்குமார் ராதாசேகர்,அடுப்பு ரமேஷ்,சுரேஷ் குமார், தாமரைச் செல்விமணிகண்டன், நகர திமுக துணைச் செயலாளர் அன்பு இளங்கோ முன்னாள் துணைச் செயலாளர் எஸ் பி ராஜேந்திரன்,பேருந்து நிலைய வியாபாரிகள் சங்க தலைவர் சிவா,மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் கந்தசாமி,நகர திமுக இளைஞரணி அமைப்பாளர் செங்கோட்டுவேல் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நவலடி ராஜா மாவட்ட விவசாய அணி தலைவர் ஆர்டிஎஸ் முருகையன் அயலக அணிமாவட்ட அமைப்பாளர் சாதிக்,ஆகியோர் உள்ளிட்ட பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.தாகம் தணிக்க வந்தவர்கள் அனைவருக்கும் தர்பூசணி பழம் ஒவ்வொன்று வழங்கப்பட்டது பெண்கள் மற்றும் பொதுமக்கள் இதனை மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனர்.
Next Story

