சுரேஷ்ராஜனுக்கு மாநில உணவு ஆணைய தலைவர் பொறுப்பு

X

நாகர்கோவில்
தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவராக என்.சுரேஷ்ராஜன் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினால் நியமிக்கப்பட்டதை அடுத்து இன்று அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து குமரி மாவட்டம் முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. குமரி மாவட்ட திமுகவினர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் துணை மேயர் மேரி பிரின்சி லதா மற்றும் முன்னாள் மாவட்ட பிரதிநிதி சகாய ஜெரால்ட் ஆகியோர் தலைமையில் ராமன் புதூர் கலுங்கு ஜங்ஷனில் முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்க, சின்னவர் உதயநிதி வாழ்க சுரேஷ் ராஜன் வாழ்க என ஆனந்த முழக்கமிட்டு பட்டாசு வெடித்தும் அப்பகுதியில் உள்ளவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். குமரி கிழக்கு மாவட்டம். மேற்கு மாவட்ட பகுதிகளில் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
Next Story