தேரூரில் புதிய அங்கன்வாடி கட்டிடம்

X
கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தேரூர் பேரூராட்சி 9-வது வார்டுக்குட்பட்ட சேதுலட்சுமி மகராணிபுரத்தில் ஏற்கனவே இயங்கி வந்த அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்து பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் இயங்கி வந்தது. இதனைக் கருத்தில் கொண்டு இப்பழைய அங்கன்வாடி மைய கட்டிடத்தை இடித்து புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் அமைத்து தர தேரூர் பேரூராட்சி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இக்கோரிக்கையினை ஏற்று அங்கன்வாடி மைய குழந்தைகளின் நலன்கருதி புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2023-2024 நிதியிலிருந்து ரூ. 14.50 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனடிப்படையில் பாதுகாப்பில்லாத பழைய அங்கன்வாடி மைய கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று பணிகள் முடிகப்பட்டது. புதிய அங்கன்வாடி மைய கட்டிட திறப்புவிழா தேரூரில் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெஸீம் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் 9-வது உறுப்பினர் சங்கரம்மாள் வரவேற்று பேசினார். 14-வது வார்டு உறுப்பினர் வீரபுத்திரபிள்ளை நன்றி கூறினார்.
Next Story

