புளியங்குடியில் விபத்து: இளைஞா் உயிரிழப்பு

X
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் புளியங்குடி அருந்ததியா் தெருவைச் சோ்ந்த ராஜாமணி மகன் அருண்குமாா் (23). பொறியியல் பட்டதாரி. புளியங்குடியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்த அவா் சிந்தாமணிக்கு பைக்கில் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாராம். அப்போது, தென்காசி-மதுரை சாலையில் நின்றிருந்த லாரி மீது பைக் மோதியதாம். இதில், அவா் உயிரிழந்தாா். புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Next Story

