இல்லந்தோறும் மாணவரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்.

இல்லந்தோறும் மாணவரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
பரமத்தி வேலூர்,ஏப்.15-  நாமக்கல் மேற்கு மாவட்ட  திமுக மாணவரணி சார்பாக  இல்லந்தோறும் மாணவரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் பரமத்திவேலூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பரமத்தி வேலூர் பேரூர் கழக செயலாளர் முருகன் தலைமை வகித்தார். நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மகிழ் பிரபாகரன், மோகனூர் மேற்கு ஒன்றிய  கழக செயலாளர் சண்முகம் ,நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பூக்கடை சுந்தர், நவலடி ராஜா, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வக்கீல் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக நாமக்கல் மேற்கு மாவட்ட கழக  பொறுப்பாளர் கே. எஸ்.மூர்த்தி கலந்து கொண்டு  இல்லந்தோறும் மாணவரணி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில மாணவரணி துணை செயலாளர் வீரமணி ஜெயக்குமார் கலந்து கொண்டார் ,  இதில் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு மாணவரணி உறுப்பினர்களாக கையொப்பமிட்டு சேர்ந்து கொண்டனர்.இல்லந்தோறும் மாணவரணி உறுப்பினர் சேர்க்கை முகாமில்  மாவட்ட மாணவரணி அமைப்பாளர்,துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழகப் பொறுப்பாளர்கள், பல்வேறு அணி பொறுப்பாளர்கள், மகளிர் அணி பொறுப்பாளர்கள்  கலந்து கொண்டனர்.
Next Story