முட்டை கொள்முதல் விலையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். -சிறு கோழிப்பண்ணையாளர்களின் மூன்று அம்ச கோரிக்கை !

X

முட்டை வியாபாரிகள் பண்ணைக் கொள்முதல் விலையில் இருந்து குறைத்து(மைனஸ் விலை), முட்டைகளை கொள்முதல் செய்வதால் இந்த தொழில் சரிவை சந்திப்பதாகவும் சிறு கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
கோழி முட்டைகளின் விற்பனை விலையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும், சத்துணவு மற்றும் ஏற்றுமதி முட்டைகளுக்கு தனித்தனியாக கொள்முதல் விலைகளை அறிவிக்க வேண்டும், அங்கீகரிக்கப்பட்ட முட்டைக் கொள்முதல் வியாபாரிகளின் விவரங்களை பண்ணையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட சிறு கோழிப்பண்ணை பாளர்கள் நாமக்கல்லில் உள்ள தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் அலுவலக சங்க கட்டடத்தை முற்றுகையிட்டனர்.நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகளிலிருந்து தினம் தோறும் சுமார் 5 கோடி கோழி கோழி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டலம், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையை தினந்தோறும் நிர்ணயம் செய்து வருகிறது.இந்தநிலையில், நாமக்கல் மாவட்ட முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டலத் தலைவர் / தமிழ்நாடு கோழி பணியாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜிடம், நாமக்கல் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளிக்க சங்க அலுவலகத்தின் முன்பாக (15.04.2025) குழுமி இருந்தனர்.ஆனால் சங்க நிர்வாகிகள் மனுவைப் பெற வராததாலும், முன் அனுமதி இன்றி ஊர்வலமாக சென்று மனு அளிக்க காவல்துறை மறுப்பு தெரிவித்ததாலும், தமிழ்நாடு கோழிப்பணையளர்கள் சங்க அலுவலகத்தை, நாமக்கல் மாவட்ட முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சிறிய கோழிப்பண்ணையாளர்கள், நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) அலுவலகத்திற்கு வருகை தந்து, அங்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில் கறியிருப்பதாவது.... கோழி முட்டை உற்பத்தி தொழில் நலிவை சந்தித்து வரும் நிலையில், பண்ணையில் இருந்து முட்டைகளை கொள்முதல் செய்யும் வியாபாரிகள்,சத்துணவு முட்டை மற்றும் ஏற்றுமதி முட்டை விலைகளை குறைத்து வாங்கி வருகின்றனர். இதனால் முட்டை கோழிப் பண்ணையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டலத் தலைவர் பண்ணை முட்டைகளுக்கான கொள்முதல் விலையை, பரிந்துரை விலை என அறிவிக்காமல், வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.பெரிய முட்டைகளின் பண்ணைக் கொள்முதல் விலையை அதன் உற்பத்தி செலவிற்கு கீழ் நிர்ணயிக்கக் கூடாது, சத்துணவு முட்டைகள் மற்றும் ஏற்றுமதி முட்டைகளுக்கு தனித்தனியாக கொள்முதல் விலையை அறிவிக்க வேண்டும்.,நாமக்கல் மண்டலத்தில் அங்கீகரிக்கப்பட்ட முட்டை கொள்முதல் வியாபாரிகள் யார் என்ற விவரங்களை வெளிப்படையாக கோழிப் பண்ணையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கைகளை இந்த மனுவில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பொதுவாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நாமக்கல் மண்டலம் நிர்ணயம் செய்யும் பண்ணைக் கொள்முதல் விலையில் மட்டுமே கோழிப் பண்ணையாளர்கள் வியாபாரிகளுக்கு முட்டைகளை வழங்கி வருகின்றனர். ஆனால் முட்டை வியாபாரிகள் பண்ணைக் கொள்முதல் விலையில் இருந்து குறைத்து(மைனஸ் விலை), முட்டைகளை கொள்முதல் செய்வதால் இந்த தொழில் சரிவை சந்திப்பதாகவும் நாமக்கல் மாவட்ட முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டலத் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Next Story