நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கான காலநிலை மாற்ற விழிப்புணர்வு கருத்தரங்கம்!

காலநிலை மாற்றம் ஏற்பட்டதன் காரணம், இதனால் ஏற்படும் விளைவுகள், மற்றும் எவ்வாறு காலநிலை மாற்றத்தை தவிர்க்கலாம் என்பதைக் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை மற்றும் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் சார்பில் நாமக்கல் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் நாமக்கல் மாவட்ட வனத்துறை உதவியோடு கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு “காலநிலை மாற்ற விழிப்புணர்வு பயிற்சி கருத்தரங்கம்” நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் இராஜா தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழும வேளாண் அறிவியல் மையத்தின் துறைத்தலைவரும், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வேல்முருகன் கலந்துகொண்டு பேசுகையில்..... காலநிலை மாற்றம் ஏற்பட்டதன் காரணம், இதனால் ஏற்படும் விளைவுகள், மற்றும் எவ்வாறு காலநிலை மாற்றத்தை தவிர்க்கலாம் என்பதைக் குறித்து விரிவாக எடுத்துரைத்து பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் அறிவியல் துறை சுற்றுச்சூழல் கருத்தாளர் முருகேசன் பேசுகையில்.... மாணவ மாணவியர் நெகிழிப் பொருட்களை மறுசுழற்சி செய்வதில் முக்கிய பங்காற்ற வேண்டும் எனவும், தேவையற்ற நேரங்களில் இருசக்கர நான்குசக்கர வாகனங்களை தவிர்த்து பொது போக்குவரத்தினை பயன்படுத்த வேண்டும் எனவும், நல்ல காற்றினை பெறுவதற்கு மாசுபடுதலை தவிர்த்து அதிக மரக்கன்றுகள் நட வேண்டும் எனவும் அறிவுறுத்தி பேசினார்.
சுற்றுச்சூழலை வலியுறுத்தி கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் மஞ்சப்பை மற்றும் சணல் கோப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட வனத்துறை அலுவலக பசுமை தோழர் ஸ்ரீஸ்ருதி, தொழில் நுட்ப உதவியாளர் சுகனேஸ்வரன், பல்வேறு துறையை சார்ந்த கல்லூரி துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரல்லா அலுவலர்கள், டிரினிட்டி மகளிர் கல்லூரி மாணவியர்கள், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவியர்கள் மற்றும் நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவ,மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தாவரவியல் துறை இணைப்பேராசிரியர் வெஸ்லி மற்றும் தாவரவியல் துறை உதவிப்பேராசிரியர் சந்திரசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story