நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை வந்து அபராதம் கட்டி சென்ற அரசு ஊழியர்கள்.! நாமக்கல் மாவட்ட ஆட்சியர் போட்ட அதிரடி ரூல்ஸ் என்ன தெரியுமா?

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  வரை வந்து அபராதம் கட்டி சென்ற அரசு ஊழியர்கள்.! நாமக்கல் மாவட்ட ஆட்சியர் போட்ட அதிரடி ரூல்ஸ் என்ன தெரியுமா?
X
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் ஹெல்மட் அணியாமல் இரண்டு சக்கர வாகனங்களில் வந்த அரசு அதிகாரிகள் உட்பட 51 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.!
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார், மாவட்டம் முழுவதும் அடிக்கடி வாகன தணிக்கை செய்து சாலை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்து வருகின்றனர்.குறிப்பாக இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாலை விபத்துக்களில் சிக்கி உயிர் சேதம் ஏற்படுவதை தடுக்கும் வகையில், ஹெல்மட் அணியாமல் இரண்டு சக்கர வாகனங்களில் செல்லும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவின்படி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இரண்டு சக்கர வாகனங்களில் வருபவர்களின் வாகனங்கள் ஆர்டிஓ அலுவலர்கள் மற்றும் போலீசார் மூலம் சோதனை செய்யப்பட்டன. அப்போது, இரண்டு சக்கர வாகனங்களில் ஹெல்மட் அணியாமல் வந்த மொத்தம் 51 அரசுத் துறை அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்களின் வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுபோன்ற தணிக்கைகள் வரும் காலங்களில் தொடர்ந்து நடைபெறும் என வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
Next Story