ஸ்ரீ மாரியம்மன் தேர் திருவிழா படுக தேசத்தில் கோலாகலம்.
ஸ்ரீ மாரியம்மன் தேர் திருவிழா படுக தேசத்தில் கோலாகலம். பாலகொலா ஊராட்சி மஞ்சக்கொம்பை ஸ்ரீ உரிய அம்மன் 25 ஆம் ஆண்டு தேர் திருவிழா உரியம்மன் கண்டியில் கோலாகலமாக இன்று கொண்டாடப்பட்டது நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரையில் ஆகம விதிப்படி உரியம்மன் கோயில் பூசாரி திரு விஸ்வன் தலைமையில் பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றது. ஆலட்டனை,மஞ்சக்கொம்பை மற்றும் பஜார் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு இன்று ஸ்ரீ உரியம்மனை வழிப்பட்டனர். நூற்றுக்கணக்கான மகளிர் முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தும் கரகம் எடுத்தும், அலகு குத்தி காவடி எடுத்தும் மேள தாளங்கள் முழங்க மாரியம்மனை வழிபட்டனர். தொடர்ந்து 25 ஆம் ஆண்டு தேர் திருவிழாவில் அலங்கரித்த தேரில் உரிய அம்மன் பவனி வந்தார். உரியம்மன் தேரை ஆலட்டனை ஊர் தலைவர் திரு. நஞ்சாகவுடர் தலைமையில், மஞ்சக்கொம்பை ஊர் தலைவர் திரு. விஷ்ணு, தேனாடு ஊர் தலைவர் திரு பில்லன் மற்றும் திரு. தருமன், பெங்கால் ஊர் தலைவர் திரு செல்வன், மைனலை ஊர் தலைவர் திரு போஜன், கோக்கலாட ஊர் தலைவர் திரு ஈஸ்வரன், கோத்திபன் ஊர் தலைவர் திரு அசோக் ஆகியோர் முன்னிலையில் படுக தேச பார்ட்டி நிறுவனர் தலைவர் முன்னாள் பாலகொலா ஊராட்சிமன்ற துணைத் தலைவர் திரு.மஞ்சை. வி. மோகன், முன்னாள் குன்னூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு சாந்தி ராமு, வழக்கறிஞர். திரு.ஜே பி சுப்பிரமணி, மேலூர் ஊர் தலைவர் திரு அர்ஜுனன் மற்றும் சிவக்குமார், அரையட்டி ஊர் தலைவர் திரு லட்சுமணன், மேல்ஓசாட்டி ஊர் திரு கணேஷ், திரு ராமமூர்த்தி ஆகியோர் வடம் பிடித்து தேர் இழுத்து கோயிலை மூன்று முறை வலம் வந்தனர். 25ஆம் ஆண்டு தேர்திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேர் திருவிழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் திரு விஸ்வன். திரு வக்கீல் முரளி, திரு சுப்பிரமணி,திரு சுதாகர் , திரு மகேஷ் திரு கோகுல் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்
Next Story




