ஆக்கி வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்!

X
தூத்துக்குடியில் துறைமுக ஆக்கிக் கிளப் விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி துறைமுக யுனைடெட் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தூத்துக்குடி கிங்ஸ் லயன்ஸ் கிளப் இணைந்து இளம் ஆக்கி வீரர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் துறைமுக ஆக்கிக் கிளப் என்று புதிதாக ஒரு அணி உருவாக்கப்பட்டு 17 வயதிற்கு உட்பட்டவர்கள் அதில் இணைக்கப்பட்டு அந்த அணியானது தமிழ்நாடு அளவில் புகழ் பெற விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தூத்துக்குடி துறைமுக யுனைடெட் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் பொது செயலாளர் ஜான் கென்னடி தலைமை தாங்கினார். தூத்துக்குடி அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்களை வழங்கினார். இதில் அதிபன் ஹார்டுவேர்ஸ் உரிமையாளர் அதிபன், வளர்மதி கிரேன் உரிமையாளர் வரதராஜன், தூத்துக்குடி கிங்ஸ் லயன்ஸ் கிளப், தலைவரும் விக்னேஷ் சில்க்ஸ் அதிபருமான விக்னேஷ், செயலாளர் டேவிட், மின்வாரிய ஆக்கி விளையாட்டு வீரர் பொன்மணி, சிக்கால் கண்டைனர் சங்கத்தின் தலைவர் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் ஜோசப், ரவி, பாலு சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

