செங்கிப்பட்டியில் விவசாயிகள் சங்க உறுப்பினர் சேர்க்கை விழா 

விவசாயிகள் சங்கம்
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தெற்கு ஒன்றியம், செங்கிப்பட்டி-சாணூரப்பட்டியில் திங்கட்கிழமை மாலை தமிழ்நாடு விவசாயிகள் சங்க உறுப்பினர் சேர்க்கை விழா மற்றும் பொதுக்கூட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் தலைமையில் நடைபெற்றது.  மாவட்ட துணைச்  செயலாளர் கே.தமிழரசன் வரவேற்றார். டெல்லி விவசாயிகள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் விஜு.கிருஷ்ணன், அகில இந்திய துணைத் தலைவர்  டி.ரவீந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சாமி. நடராஜன்  ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.நடராஜன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ். தமிழ்ச்செல்வி, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சி.ஜெயபால், என்.சுரேஷ்குமார், என். சரவணன், கே.அபிமன்னன், விவசாயிகள் சங்க முன்னாள் ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் எம்.பழனி அய்யா, எஸ்.கோவிந்தராஜ், ஆர்.உதயகுமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், விவசாயிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக, ஒன்றியத் தலைவர் கெங்கை.பாலு நன்றி கூறினார். குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்க வேண்டும். பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. பயிர்க்காப்பீடு அனைவருக்கும் கிடைத்திட வேண்டும். நூறு நாள் வேலையை தொடர்ச்சியாகவும், சம்பள பாக்கி இல்லாமலும் வழங்க வேண்டும். செங்கிப்பட்டி பகுதியின், வாழ்வாதாரமான உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் உயர்மட்ட கட்டளை மேட்டு வாய்க்கால் ஆகியவற்றை தூர்வாரி, பழுதடைந்துள்ள மதகுகளை புதுப்பிக்க வேண்டும்" எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சந்தா டெல்லி விவசாயிகள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்  விஜு.கிருஷ்ணனிடம் விவசாயிகள் சங்க சந்தா ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது. முன்னதாக, கட்சியின் அரசியல் தலைமைக் குழு பொறுப்பேற்று முதல்முறையாக செங்கிப்பட்டி வருகையையொட்டி விஜு.கிருஷ்ணனுக்கு கட்சி தோழர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர்.
Next Story