தஞ்சாவூரில் கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் திருட்டு

X

பைக் திருட்டு
தஞ்சாவூர் யாகப்பா நகர் பகுதியில் கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் வடக்குத் தெருவை சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் அரவிந்தன் (26). இவர் தனது பைக்கில் கடந்த 3 ஆம் தேதி யாகப்பா நகர் பகுதியில் உள்ள போட்டோ ஸ்டூடியோவிற்கு வந்தார். அங்கு தனது பைக்கை நிறுத்தி வைத்துவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அரவிந்தன் பல இடங்களிலும் தனது பைக் தேடிப் பார்த்தார். ஆனால் பைக் கிடைக்கவில்லை. இது குறித்து தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்தில் அரவிந்தன் புகார் செய்தார். இதன் பேரில், காவல் உதவி ஆய்வாளர் சத்யநாதன் மற்றும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பைக்கை திருடிய மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.
Next Story