நிர்மலா சீதாராமன் உலக அழகிப் போட்டிக்குத் தகுதியானவர் - நாஞ்சில் சம்பத் விமர்சனம் !

கோவை மாவட்டம், சூலூர் பாப்பம்பட்டியில் நடைபெற்ற திமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில், திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் மற்ற கட்சிகளை விமர்சனம் செய்தார்.
கோவை மாவட்டம், சூலூர் பாப்பம்பட்டியில் நேற்று நடைபெற்ற திமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில், திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசுகையில், விலைவாசி உயர்வு குறித்து கேட்டால் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்று சொல்லும் நிர்மலா சீதாராமன், ஆண்டுதோறும் உலக அழகி போட்டி நடத்தினால் அதில் பரிசு வாங்குவார் போல என கடுமையாகத் தாக்கினார். மேலும், "பிரபாகரனை 3 நிமிடங்கள் மட்டுமே சந்தித்து, புகைப்படம் எடுத்துவிட்டு அதைக் கொண்டு தமிழ்நாட்டில் அரசியல் செய்யும் சீமான், கருத்தரிப்பு மையம் நடத்துகிறார்" எனவும் விமர்சித்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த அவர், "சசிகலாவின் காலைப் பிடித்து முதலமைச்சர் ஆனவர், இப்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுகவை பலவீனப்படுத்தும் வகையில் செயல்படுகிறார். பெரியாருக்கு சிலை வைத்த எம்ஜிஆரின் அதிமுகவை, இலங்கை போர்க்குற்றத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த ஜெயலலிதாவின் அதிமுகவை, பாஜகவுடன் கூட்டணி வைத்து அதன் நம்பகத்தன்மையை எடப்பாடி பழனிசாமி மாற்றிவிட்டார்" எனக் கூறினார். பாஜகவை விமர்சித்த அவர், "திமுகவை வீழ்த்த வேண்டும் என பலர் நினைக்கின்றனர், ஆனால் முதல்வர் ஸ்டாலின் இருக்கும் வரை அது சாத்தியமில்லை" எனத் தெரிவித்தார். மேலும், "நைனார் நாகேந்திரன் தாமதமாக வரும் ரயிலுக்கு சமம். பாஜகவுக்கு தமிழகத்தில் தனித்து நிற்க முடியாத நிலையில், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவை நாடுகிறது. மோடி போகாத இடம் சுடுகாடு மட்டுமே" எனவும் கூறினார். குஜராத் சால்வைகளை அரசியல் தலைவர்கள் பயன்படுத்த வேண்டாம் எனவும் அழைப்பு விடுத்தார். திமுகவின் ஆட்சி சாதனைகளை பாராட்டிய நாஞ்சில் சம்பத், மக்கள் ஆதரவு தொடரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
Next Story