குற்றாலம் தங்கும் விடுதியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

X

தங்கும் விடுதியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி இருந்த வல்லம் பகுதியை சேர்ந்த அசோக் குமார் என்பவர் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து குற்றாலம் போலீசார் முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை என தெரியவந்துள்ள. இதில் குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story