மேலேரி கிராமத்தில் மின் கம்பியில் சிக்கி பசுமாடு பலி!


மேலேரி கிராமத்தில் மின் கம்பியில் சிக்கி பசுமாடு பலி!
ராணிப்பேட்டை மாவட்டம் மேலேரி கிராமத்தில் பெருமாள் என்பவருக்கு சொந்தமான பசுமாடு அங்குள்ள நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது பலத்த காற்று வீசிய நிலையில் மின் கம்பி அறுந்து கீழே விழுந்தது. இந்த கம்பியை பசுமாடு மிதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இது குறித்து வருவாய் மற்றும் கால்நடைத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வருவாய்த் துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
Next Story