சிறுமிக்கு பாலியல் தொல்லை - முதியவருக்கு சிறை தண்டனை

X

இளையான்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லையா (80). இவர் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக சிவகங்கை அனைத்து மகளிர் போலீசார் செல்லையாவை கைது செய்து அவர் மீது சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி கோகுல் முருகன் குற்றம் சாட்டப்பட்ட செல்லையாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ3000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
Next Story