கோவை: அமைச்சர் பொன்முடியை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

கோவையில் அமைச்சர் பொன்முடியை கண்டித்து இந்து அன்னையர் முன்னணி சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர் பொன்முடியை பதவியில் இருந்து நீக்கக் கோரி இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவையில் அமைச்சர் பொன்முடியை கண்டித்து இந்து அன்னையர் முன்னணி சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார், அமைச்சர் பொன்முடி இந்து மதத்தை இழிவுபடுத்துவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், அவர் பதவிப்பிரமாணத்தின்போது எடுத்த உறுதிமொழிக்கு எதிராக செயல்படுவதாகவும், அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆளுநரிடம் புகார் மனு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story