கோவை: ஒப்பந்தப் பணியாளர் மரணம் - இழப்பீடு கோரி போராட்டம் !

X

பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பு மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த மணி உயிரிழந்த நிலையில் அவரது மரணத்திற்கு இழப்பீடு கோரி அவரது உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகராட்சியில் துடியலூர் 3வது வார்டில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பு மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த மணி என்பவர், கடந்த சனிக்கிழமை பணி முடித்து இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைத்தடுமாறி கீழே விழுந்து தலையில் காயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்று கோவை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்நிலையில், மாநகராட்சி அல்லது ஒப்பந்த அலுவலக அதிகாரிகள் யாரும் இதுவரை வந்து பார்க்கவில்லை என்றும், காப்பீட்டு திட்டம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்றும் கூறி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய அதிகாரிகளை அழைத்து வருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Next Story