திருமணம் பேச வர மறுத்ததால் உறவினர் வீட்டுக்கு தீ

X

திருமணம் பேசி முடிக்க வர மறுத்ததால் உறவினர் வீட்டுக்கு தீ வைத்த இளைஞர் கைது
மூலனூர் அருகே உள்ள கருப்பன்வலசு கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 55). அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவுக்காரர் மூர்த்தி (வயது 25). இவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு கீதா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். பின்னர் அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறு பாட்டால் கீதா பிரிந்து சென்று விட்டார். இந்த நிலையில் மூர்த்தி லட்சுமியிடம் சென்று தான் தற்போது வேறு ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டு தனக்கு திருமணம் செய்து வைக்க வந்து உதவுமாறும் கேட்டுக் கொண்டார். அப்போது லட்சுமி ‘நீ ஏற்கனவே ஒரு பெண்ணை வைத்து ஒழுங்காக குடும்பம் நடத்தவில்லை. இப்போது இன்னொரு பெண் தேவையா? என்று சத்தம் போட்டிருக்கிறார். இதில் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டிற்கு சென்று விட்ட மூர்த்தி நடந்த தகராறை மனதில் நினைத்துக்கொண்டே இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மூர்த்தி இரவு 11 மணி அளவில் வந்து லட்சுமியின் குடிசைக்கு தீவைத்து விட்டு ஓடிவிட்டார். இதில் பக்கத்தில் உள்ள வீடும் எரிந்து நாசமானது. இதுகுறித்து மூலனூர் போலீசில் லட்சுமி புகார் அளித்துள்
Next Story