சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது என

X
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில், அதிமுக பூத் கிளை அமைக்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். நாகை நகர செயலாளர் தங்க கதிரவன், தெற்கு ஒன்றிய செயலாளர் பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மாவட்ட செயலாளர் எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன், மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் பாபு முருகவேல் ஆகியோர் கலந்து கொண்டு, கூட்டத்தின் நோக்கம் குறித்தும், கட்சியின் வளர்ச்சி குறித்தும் பேசினர். கூட்டத்தில், வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது, கிளை கழகங்கள்தோறும் அதிக அளவிலான உறுப்பினர்களை கட்சியில் இணைப்பது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், நாகை தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சிவபெருமாள், திருமருகல் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் பால்ராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் ராம்சந்தர், மாவட்ட மாணவரணி செயலாளர் விக்னேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சத்யா நன்றி கூறினார்.
Next Story

