கோவை: விசைத்தறியாளர்கள் போராட்டம் - பேச்சுவார்த்தை தோல்வி !

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கடந்த 15 மாதங்களாக கூலி உயர்வு கோரி போராடி வரும் விசைத்தறி உரிமையாளர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இடையே கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கடந்த 15 மாதங்களாக கூலி உயர்வு கோரி போராடி வரும் விசைத்தறி உரிமையாளர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இடையே நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க நிர்வாகி பூபதி கூறியதாவது, 28வது நாளாக எங்களது வேலை நிறுத்த போராட்டம் தொடர்கிறது. மாவட்ட ஆட்சியர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அழைப்பின் பேரில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டோம். அவர்கள் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் நேற்று பேசிய தகவல்களை எங்களிடம் தெரிவித்தனர். இந்த பேச்சுவார்த்தையில் ஒரு சிறிய முன்னேற்றம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. நாங்கள் கேட்கும் கூலிக்கும், ஜவுளி உற்பத்தியாளர்கள் கொடுக்க முன்வரும் கூலிக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. எனவே, ஜவுளி உற்பத்தியாளர்களை மீண்டும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான முடிவை பெற்றுத் தர வேண்டும். நாங்கள் 60 சதவீத கூலி உயர்வு கேட்டோம், தற்போது கணிசமாக குறைந்து வந்துள்ளோம். ஜவுளி உற்பத்தியாளர்கள் சிறிய அளவிலான உயர்வுக்கு உத்தரவாதம் அளித்துள்ளனர். ஆனால் அது தொழிலை பாதுகாக்கும் அளவிற்கு போதுமானதாக இல்லை. அடுத்த கட்டமாக எங்களது கூட்டமைப்பை கூட்டி ஆலோசித்து முடிவு எடுப்போம் என்று கூறினார்.
Next Story