துணை மேயர் தெருவில் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

X

பாதாள சாக்கடையில் உள்ள அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை
காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோவில் பின்புறம், ஆடிசன்பேட்டை தெரு உள்ளது. இத்தெருவில் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் வீடு மட்டுமின்றி 50க்கும் மேற்பட்ட வீடுகள், பல்வேறு வணிக நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. வாகன போக்குவரத்தும், பக்தர்கள், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இச்சாலையில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவுநீர் வழிந்தோடியது. இதனால், வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மட்டுமின்றி அவ்வழியாக நடந்து சென்ற பாதசாரிகளும் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. இப்பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, ஆடிசன்பேட்டை தெருவில், பாதாள சாக்கடையில் உள்ள அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story