கோவில்பட்டி கல்லூரியில் விண்வெளி அறிவியல் கருத்தரங்கு!

X

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அஸ்ட்ரோ கிளப் சார்பில் விண்வெளி அறிவியல் குறித்த கருத்தரங்கு நடந்தது.
கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அஸ்ட்ரோ கிளப் சார்பில் விண்வெளி அறிவியல் குறித்த கருத்தரங்கு நடந்தது. தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் மாவட்டங்களில் அஸ்ட்ரோ கிளப்புகள் அமைக்கப்பட்டு வானவியல் மற்றும் அறிவியல் கருத்துக்களை பரப்புரை செய்து வருகிறது. கோவில்பட்டி கல்லூரியில் நடந்த கருத்தரங்கிற்கு தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்துமுருகன் தலைமை வகித்தார். கல்லூரி இயற்பியல் துறை தலைவர் சசீதா, வணிக மேலாண்மை துறை தலைவர் விஜய கோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயற்பியல் துறை பேராசிரியர் பிரியங்கா அனைவரையும் வரவேற்றார். திருச்சி நேரு நினைவு கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியரும், 5000 இடங்களில் அஸ்ட்ரானமி நிகழ்வின் மாநில ஒருங்கிணைப்பாளருமான ரமேஷ் கலந்து கொண்டு சூரியன், நிலா ஆகியவற்றின் இயக்கங்களை வைத்து நாட்காட்டி கணிப்பது பற்றியும், சூரியன் நிழலை வைத்து கட்டிட உயரத்தை கணிப்பது குறித்தும், வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் குறித்தும் செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்தார். இதில் கல்லூரி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கல்லூரி பேராசிரியை சரவண குமாரி நன்றி கூறினார்.
Next Story