பிளெக்ஸ் உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுரை

X
Komarapalayam King 24x7 |16 April 2025 2:44 PM ISTகுமாரபாளையம் பிளெக்ஸ் உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுரை
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பிளெக்ஸ் உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுரை கூறினர். குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில், பிளெக்ஸ் உரிமையாளர்களுடன் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தவமணி பிளெக்ஸ் உரிமையாளர்களிடம் கூறியதாவது: பிளெக்ஸ் போர்டுகளை போக்குவரத்துக்கு இடையூறாக வைக்க கூடாது. நிரந்தரமாக பொது இடங்களில் வைக்க கூடாது. பிளெக்ஸ் வைத்து மூன்று நாட்களுக்குள் அகற்றி விட வேண்டும். ஒவ்வொரு பிளெக்ஸ் போர்டில், பிளெக்ஸ் நிறுவன பெயர் மற்றும் மொபைல் எண் ஆகியவை நிச்சயம் இடம்பெற வேண்டும். பிளெக்ஸ் வைக்கும் முன்பு, நகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, போலீசார் வசம் தகவல் தெரிவித்து பின்னர்தான் வைக்க வேண்டும். விதி மீறும் பிளெக்ஸ் நிறுவனத்தார் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
