அம்மா பூங்காவில் மின் விளக்குகள் இல்லாமல் பொதுமக்கள் அச்சம்

X
Komarapalayam King 24x7 |16 April 2025 2:48 PM ISTகுமாரபாளையம் அம்மா பூங்காவில் மின் விளக்குகள் இல்லாமல் பொதுமக்கள் அச்சமடைந்து வருகிறார்கள்.
நாமக்கல் மாவடடம் குமாரபாளையம் கத்தேரி பிரிவில் அம்மா பூங்கா உள்ளது. குளத்துக்காடு, தட்டான்குட்டை ஊராட்சி, ஜெய்ஹிந்த் நகர், சத்யா நகர், கதிரவன் நகர், வட்டமலை, வளையக்காரனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் நடை பயிற்சிக்கு வருகிறார்கள். பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுடன் மாலை நேரங்களில் வந்து ஊஞ்சல் ஆடி, பொழுதை கழித்து வருகின்றனர். பள்ளி விடுமுறை என்பதால் இன்னும் இரண்டு மாதங்கள் கூட்டம் அதிகம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு போதுமான விளக்குகள் இல்லாமல் இருட்டான நிலை இருந்து வருகிறது. இதனால் பாம்பு, தேள் போன்றவைகள் வார வாய்ப்பாக உள்ளது. ஆகவே, பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்து வருகிறார்கள். பொதுமக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்பதால், உடனே, பூங்காவில் போதுமான மின் விளக்குகள் அமைத்து, வெளிச்சம் அதிக அளவில் இருக்கும் படி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
