பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் மோசடி

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் மோசடி
X
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் மோசடி.. திண்டுக்கல் ஆட்சியருக்கு பறந்த உத்தரவு..!
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த துரைசாமி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டி ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டு திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம் மற்றும் மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் கிராம ஊராட்சியில் உள்ள மக்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த திட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும ஊராட்சி மன்ற செயலாளர் ஆகியோர் இணைந்து பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் மற்றும் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் சொந்த வீடுகளில் உள்ளவர்களுக்கு புதிய வீடு கட்டுவதற்கு வேலை உத்தரவு பெற்று சுமார் பல லட்சம் ரூபாய் மேல் அரசு பணத்தை மோசடி செய்துள்ளனர். மேலும் அரசு புறம்போக்கு இடத்தில் வீடு கட்டுவதற்காக வேலை உத்தரவு பெற்று மோசடி செய்துள்ளனர். ஏழை எளிய மக்கள் சொந்த வீட்டில் வசிப்பதற்காக அரசு கொண்டுவரும் இந்த திட்டங்களை நிதி மோசடி செய்து அரசு பணத்தை தங்களின் தேவைக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த மோசடி குறித்து அரசு அதிகாரிகளுக்கு மனு அளித்தும், மோசடி செய்தவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த திட்டங்களில் நிதி மோசடி செய்த ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சுகுனா மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர் ஜெயச்சந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் பூர்ணிமா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது, விசாரணை செய்த நீதிபதிகள் மனுதாரரின் புகர் மனுவை பரிசளித்து சட்டத்துக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.
Next Story